Temple Guide

ஐந்தாம் திருச்சுற்று – 2

Map of Srirangam-5.2

Map-5.2

In this post, Sujatha Desikan guides us through the 1000-kaal Mandapam, Sesharayar Mandapam, Vellai Gopuram and more.  (The numbers in brackets refer to the locations on Map of Srirangam Temple. To follow them keep the Map-5.2 open in the next Tab. )

ஐந்தாம் திருச்சுற்று.

ஐந்தாம் திருச்சுற்றில் ஆயிரங்கால் மண்டபம் [77] உள்ளது. கருத்து மண்டபம் வழியாக இருக்கும் இரும்புக் கதவு வழியாகச் செல்லலாம்; ஆனால் அது பெரும்பாலும் மூடியிருக்கும். அதனால் நான்காம் திருச்சுற்று வழியாகத்தான் போக முடியும். ஆயிரங்கால் மண்டபத்தில் இருப்பது மொத்தம் 864 தூண்கள். விஜயநகர அரசர்களின் கைங்கர்யம். மூலையில் இருக்கும் சில தூண்கள் சோழர் காலம் என்கிறது ஆராய்ச்சிக் குறிப்புகள். இங்குதான் இராப் பத்து வைகுண்ட ஏகாதசி உற்சவம், அரையர் சேவை எல்லாம் நடக்கும்.

ஆயிரம் காIMG_0522ல் மண்டபத்துக்கு வெளியே வந்தால், வெள்ளைக் கோபுரத்தின் வழியாக வெளியே செல்வதற்குமுன் ஒரு சிறிய மண்டபம் தென்படும். இதுதான் கனு மண்டபம். இந்த மண்டபத்துக்கு எதிர்ப்புறம் இருப்பது வெள்ளைச் சுதையால் கட்டப்பெற்ற வெள்ளைக் கோபுரம் [78]. ஸ்ரீரங்கத்திலேயே ராஜகோபுரத்துக்குமுன்பு மிக கம்பீரமான கோபுரம் இதுதான் என்று சொல்லலாம். முஸ்லீம் படையெடுப்புக்கு முன்பு இந்த கோபுரம் இடி விழுந்து பாழடைந்தபோது கந்தாடை இராமானுஜ வீரசுந்தர பிரம்மராயர் என்பவர் கீழ்த்தளம் வரை திரும்பக் கட்டி வெள்ளைக் கோபுரத்தை மீண்டும் எழுப்பினார் என்ற குறிப்பு கோயிலொழுகில் இருக்கிறது. அப்போது மேல்தளம் வரை செல்லப் படிகள் அமைத்தார். இந்த மேல்தளத்துக்குச் சென்று பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும் என்கிறார்கள். மார்கழி மாத

ங்களில் அதிகாலையில் இதன்மேலிருந்து ஒலிபரப்பாகும் திருப்பள்ளியெழுச்சியும் திருப்பாவையும் ஸ்ரீரங்கம் முழுவதும் கேட்கும்.

வெள்ளை கோபுரத்தைப் பற்றி சில சுவாரசியமான குறிப்புகள் உள்ளன. கோனேரி ராஜாவின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அழகியமணவாள தாஸர் மற்றும் இரண்டு ஜீயர்கள்IMG_0516 கோபுரத்தின் உச்சிக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டனர். இவர்களின் நினைவாக அவர்களின் திருவுருவங்கள் கோபுரத்தில் பொறிக்கப்படடுள்ளதைப் பார்க்கலாம்.

திருவரங்கம் கோவிலையும் அதன் சொத்துகளையும் சூறையாடிய தில்லிப் படை உபதளபதி மேலும் மேலும் பல உயிர்களைப் பலிவாங்கி கோவிலையும் ஆக்கிரமித்து அட்டகாசம் செய்துகொண்டிருப்பதைப் பொறுக்கமாட்டாத அம்சகலா என்ற தேவரடியார்ப் பெண், ஒரு முடிவோடு தன்னை நன்கு அலங்கரித்துக்கொண்டு உபதளபதி முன் ஆடி அவனை மயக்கிப் பேசியே வெள்ளைக் கோபுரத்தின் மேலே கூட்டிப் போய் அவனை எட்டிப் பார்க்கச் செய்து பின்னிருந்து பிடித்துத் தள்ளிக் கொன்றாள்; பின் தானும் கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டாள். குற்றுயிராகப் போராடும்போது தனக்கு மட்டுமல்லாது இனி வருங்காலத்திலும் தன் இனத்தாராகிய திருவரங்கத்தின் தேவரடியார் யார் இறந்தாலும் அவர்களுக்கு கோவிலிலிருந்து மாலையும் பரிவட்டமும் கொண்டுவந்து சூட்டவேண்டும்; கோவில் திருமடைப்பள்ளியிலிருந்து வாய்க்கரிசியும் உடலை எரியூட்ட திருமடைப்பள்ளியிலிருந்து நெருப்பும் வரவேண்டும் என்று வரமாகக் கேட்டுக்கொண்டு இறந்தாள். இதன்படி தேவரடியார்கள் எல்லாம் சட்டப்படி ஒழிக்கப்பட்டும், சமீபத்தில் இறந்த திருவரங்கத்தின் கடைசித் தேவரடியார் வரை இந்த மரியாதைகள் வழங்கப்பட்டே வந்தன. .

வெள்ளை கோபுரத்துக்கு எதிர்ப்புறம் ஒரு சின்ன மண்டபம் இருக்கிறது என்று பார்த்தோம் அதற்குப் பக்கத்தில் இருப்பது சேஷகிரி ராயர் மண்டபம் [79]. இங்குள்ள சிற்பங்களில் இருக்கும் நுணுக்கங்களைப் பல சமயம் வியந்திருக்கிறேன். நாயக்கர்களின் கைவண்ணம் இவை. முன்னங்கால்களை மேலே தூக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் குதிரைகளின்மேல் ஈட்டியுடன் போர் வீரர்கள் அமர்ந்த நிலையில், குதிரையின் கீழ்ப் பகுதியில் வேட்டை வீரர்கள் காட்டு மிருகங்களை அடக்கும் கண்கவர்க் காட்சிகள். குதிரையின் வாயில் இருக்கும் பற்கள், ஏன் குதிரையின் வாலில் இருக்கும் இருக்கும் முடிக்கற்றைகளைக்கூட அழகாகச் செதுக்கியிருப்பார்கள். நிச்சயம் பார்க்கவேண்டிய இடம்.

இங்கே தூண்களில் இருக்கும் தசாவதாரச் சிற்பங்களும், ஒரே முகம் இரண்டு உடலாகத் தெரியும் யானை-மாடு சிற்பமும் பிரசித்தி பெற்றவை. அதேபோல் ஆஞ்நேயர் தன் வாலைச் சுருட்டி ராவணனுடன் சரிசமமாக உட்கார்ந்த நிலை, ஒற்றைக் காலில் கிருஷ்ணர், இராமர் வில்லை முறிக்கும் காட்சி என்று எல்லாம் நம்மைப் பரவசப்படுத்தும். இங்கே ஒரு ராமர் சந்நிதி [80] உண்டு. கொஞ்சம் தள்ளி வந்தால் முன்பு நாம் பார்த்த பிள்ளைலோகாச்சாரியார், உடையவர் சந்நிதிகள் வந்துவிடும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s