Temple Guide

முதலாம் திருச்சுற்று

Map of Srirangam-1

Map-1

Finally, we are in the presence of Azhagiya Manavalan (Utsavamurthi) and Sri Ranganatha (Moolavamurthi).  (The numbers in brackets refer to locations on the Map of Srirangam. To follow them open Map-1 in a new Tab.)

முதலாம் திருச்சுற்று

திரு அணுக்கன் வாசல் வழியாக உள்ளே சென்றால் நாம் அடைவது தர்மவர்மன் திருச்சுற்று. சந்நிதிக்குள் நுழையும்போது ஜயன், விஜயன் என்ற இரு துவாரபாலகர்களைப் பார்க்கலாம். மிக அழகாகச் செய்யப்பட்ட சிலைகள். நிஜமாகவே ஏழைக் கவிழ்த்துப் போட்ட மூக்கு அவர்களுடையது. அங்கே இருக்கும் இரு தூண்கள் தங்க மூலாம் பூசப்பட்ட தகடுகளால் இருக்கும். அவற்றுக்கு ‘திருமணத் தூண்கள்’ என்று பெயர். ஆழ்வார்கள் இந்தத் தூண்களைப் பற்றிப் பாடியுள்ளார்கள்.

பாதுகாப்பு கருதி இந்தச் சுற்றைத் தற்போது வலம்வர முடியாதவாறு கம்பிபோட்ட கதவுகளால் மூடியுள்ளார்கள். இங்கே சுவர்ச் சித்திரங்கள், வண்ண ஓவியங்கள் உள்ளன. திருமணத் தூண்களைத் தாண்டி வந்தால் உள்ளே இருக்கும் மண்டபத்துக்குப் பெயர் காயத்ரி மண்டபம் [3]. இங்கே 24 தூண்கள்; காயத்திரியின் 24 எழுத்துகளாக அவற்றைக் கூறுவர். தற்போது இவற்றை கிரானைட் கல்லால் மூடியுள்ளார்கள். வரிசையில் நிற்கும் மக்கள், க்யூவில் நிற்கும்போது என்ன செய்வது என்று தெரியாமல், கிரனைட் கற்களின் இடுக்குகளில் சில்லறைகளை உள்ளே செருக ஆரம்பித்துள்ளார்கள். நாளை இவை ‘சில்லறைத் தூண்கள்’ என்று பெயர் பெறலாம்.

வரிசையில் நிற்கும்போது இடது பக்கம் மூலையில் ஆதிவராஹப் பெருமாளைப் பார்க்கலாம். நான் சின்ன வயதிலிருந்தே இவரைப் பார்த்திருக்கிறேன்; எப்போதுமே இவருக்கு இடப்பட்டிருக்கும் திருமண் கோணலாகவும் கட்டப்பட்டிருக்கும் வேஷ்டி அழுக்காகவும் இருக்கும்.

காயத்ரி மண்டபத்திலிருந்து பிரதக்ஷணமாக வந்து, குலசேகரன் படியைத் தாண்டி உள்ளே சென்றால் கர்ப்பகிரஹத்தில் [1] “என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று திருப்பாணாழ்வார் வர்ணித்த உற்சவமூர்த்தியான அழகிய மணவாளன் என்னும் ரெங்கராஜனையும், பள்ளிகொண்ட தோற்றத்தில் மூலவரான ரெங்கநாதரையும் சேவிக்கலாம். நாம் அரங்கனைப் பார்க்கும்போது திருப்பாணாழ்வார் சொன்ன இந்த வரிகள் நினைவுக்கு வரும்.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே

மேக நிறத்தவன், மாடு மேய்த்தவன், வெண்ணெய் உண்டவன், என் உள்ளம் கவர்ந்தவன், தேவர்களுக்கெல்லாம் தலைவன், திருவரங்கத்தில் உள்ளவன், என் அமுதம், இவனைக் கண்டபின் என் கண்கள் மற்ற எதையும் பார்க்காது என்பது எவ்வளவு உண்மை!

எவ்வளவோ நூற்றாண்டுகளாக நம் எல்லோரையும் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் பெருமாளை நாமும் பார்க்கிறோம் என்று நாம் பெருமைப் படவேண்டிய இடமும் கணமும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s